ராகுலின் கதை

சீன் 3: கேன்டீன்

சுத்தி ஸ்டுடெண்ட்ஸ் கூட்டம் இருக்க போட்டி ஆரம்பம். முதல் போட்டி வினிதா செய்த சிறு தவறால் ராணியை இழந்து போட்டியும் தோற்கிறாள்.

ராகுல்: பாதி மொட்டை ரெடி.

வினிதா: பாக்கலாம்.

அடுத்த போட்டியில் மறுபடியம் ராணியை இழந்தாள் வினிதா!! ராகுல் ராணியை வெட்டிவிட்டு கொக்கரித்தான்.

ராகுல்: குப்பிடுடா மொட்டை போடுறவனை.

ஆனால், சிறுது நேரத்தில் ஆட்டம் மாறியது, ராணியை கொடுத்தது வினிதா செய்த சூழ்ச்சி என ராகுல் தாமதமாக புரிந்துகொண்டான். இம்முறை வினிதா வெற்றி பெற்றாள். இதுவே இந்த காலேஜ்ல ராகுலின் முதல் தோல்வி. ராகுல் படபடப்பு ஆனான். சரியாக யோசிக்க முடியவில்லை. மூன்றாவது கடைசி போட்டியில் சீக்கிரமே ராகுல் வீழ்ந்தான்.

வினிதா: என்ன பெட் ராஜா, பந்தயத்துக்கு ரெடியா?

ராகுல்: ஆசையா வளர்த்த முடி, சரி மொட்டை போட்டுக்குறேன்.

வினிதா: என்னது மொட்டையா, பந்தயத்தை மறந்துட்டாயா? நீ ஆசையா வளர்த்த முடிய வெட்ட வேண்டாம். அனா நீ நாளையில் இருந்து சடை பின்னிதான் காலேஜ் வரணும்.

சீன் 4: ராகுல் வீடு

அக்கா: இந்த பெட் வைக்கிற பழக்கத்தை விடுன்னு எத்தனை தடவை சொன்னேன். கேட்டியா? சரி உக்காரு சடை பின்னி விடுறேன்.

ராகுல்: அக்கா இந்த சவரி முடியும் வைத்து சடை பின்னனுமாம்.

அக்கா: இதை வைத்தால் இடுப்பு வரை சடை வருமே. இரு நான் ஒன்னு பன்றேன். இந்த சவரியை மடித்து பின்னுறேன்.

ராகுல்: அய்யோ அக்கா, இது என்ன பின்னாடி பார்த்தால் பொண்ணு மாதிரி இருக்கு. இப்படியே எப்படி அக்கா காலேஜ் போறது. ஏதாவது பண்ணு அக்கா!

அக்கா: சடை பிண்ணினா பொண்ணு மாதிரி தான் இருக்கும். அந்த வினிதா சரியான தண்டனை தான் குடுத்திருக்கா. ஒன்னு பண்ணு, இந்த துணியை தலையில் போர்த்திக்கோ அப்ப ஒன்னும் தெரியாது.

சீன் 5: காலேஜ் மைதானம்

அனிதா: ஆஹா, இங்கே பாருடி நம்ம பெட் ராஜாவை. முக்காடு போட்டுட்டு வரார்.

வினிதா: என்னது பெட் ராஜாவா? அது நேத்து வரை. இப்போல இருந்து பெட் ராணி.

ராகுல்: ஏய், நீ எல்லை மீறி பேசுற!

வினிதா: பின்ன பொட்ட மாதிரி முக்காடு போட்டு வந்தா ராணினுதான் கூப்பிடனும்.

ராகுல்: இங்கே பாரு பந்தயம் படி நான் சடை பின்னிகிட்டேன். ஆன மேல துணி போட கூடாதுனு எந்த பந்தயமும் இல்லை.

வினிதா: சரி இப்போ பந்தயம் வைப்போம். தில் இருக்கா?

ராகுல்: என்ன பந்தயம்?

வினிதா: நீ ஜெயித்தால் பழைய பந்தயம் கேன்சல். நான் ஜெயித்தால் உன் முடியுடன் சேர்த்து முகமும் என் கண்ட்ரோல். சம்மதமா?

ராகுல்: சம்மதம், இப்போவும் செஸ் தான், ஆனா இந்த தடவை ஒரே போட்டி தான். இப்போவே விளையாடலாம்.

அங்கேயே போட்டி ஆரம்பம். இந்த முறையும் வினிதா சுலபமாக ஜெய்கிறாள்.

வினிதா: என்ன மேடம், நாளைக்கு காலை ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு வந்திரு.

ராகுல்: ஏய் என்னது மேடம்மா, பல்லை உடைப்பேன்.

வினிதா: பாக்கலாம், பாக்கலாம், நாளைக்கு காலை 6 மணிக்கு இந்த அட்ரஸ்க்கு வந்துருடி!

3 thoughts on “ராகுலின் கதை

  1. சங்கீதா's avatar சங்கீதா

    மஹி, என் கதையை publish பண்ணினத்துக்கு நன்றி. ஒரு கிரெடிட் லைனை சேர்த்திருக்கலாம். இந்த கதை படங்களுக்காக எழுத பட்டது. படங்களுடன் இந்த கதையை படிக்க https://m.facebook.com/story.php?story_fbid=135389571136359&id=100039959495391.

    Like

    1. மன்னிக்கவும் சங்கீதா அவர்களே, உங்கள் கதை என்று எங்களுக்கு தெரியாது, நாங்கள் இப்போது உங்களுக்கு கிரெடிட் கொடுத்து உள்ளோம்

      Like

Leave a comment