ராகுலின் கதை

சீன் 6: பியூட்டி பார்லர்

வினிதா: மேடம் நான் சொன்ன பையன் இவன் தான். இவனுக்கு தான் பண்ணனும்!

ராகுல்: என்ன பண்ண போறீங்க?

வினிதா: அவசர பாடாதடி, பார்க்கத்தான போற.

ராகுல்: ஏய் இன்னொரு தடவை டி போட்டு கூப்பிட்ட நடக்கிறதே வேற.

வினிதா: ஓ அப்படியா, அப்போ இனி காலேஜில் எல்லா பொண்ணுகளும் உன்னை டி போட்டு தான் கூப்பிட போறாங்க. ஏன்னு தெரியனுமா? கொஞ்சம் பொருத்துக்கோ.

அங்கே ராகுல்க்கு நடந்தவை: வாக்ஸிங் waxing, புருவம் கழித்தல் eye brow threading, காது குத்தல் ear piercing, கண் மை eye liner, மஸ்க்காரா mascara, உதடு சாயம் லிப்ஸ்டிக் மற்றும் கொஞ்சம் make up.

வினிதா: அக்கா இவனுக்கு நல்லா பெரிய கொண்டை போட்டுவிடுங்க. தலையில் துணி போட்டாலும் அது தெரியணும். அப்புறம் அந்த பூவையும் வைங்க. பூ வாசனையை எந்த துணி போட்டு மறைக்க போறான்னு பாக்குறேன்.

எல்லாம் முடிந்த பிறகு ராகுல் கண்ணாடி பார்க்க அனுமதிக்கபட்டான். அவனால் நம்ப முடியவில்லை. அவன் பையன் என்று யாரும் நம்பமாட்டார்கள். அசல் பொண்ணு மாதிரி காணப்பட்டான். மேலும் தலையில் போட்ட துணியை முஸ்லீம் பெண்கள் போல் தலையை சுற்றிவிட்டு துப்பட்டாவாக போட்டிருந்தார்கள்.

வினிதா: நீ இனி காதில் கம்மல் இல்லாமல் இருக்க கூடாது. இனி கண்டிப்பா டெய்லி இந்த மாதிரி தான் அலங்கரிக்கணும்.

சீன் 7: ராகுல் வீடு

அக்கா: அய்யோ ராகுல் இது என்ன கோலம். ஏன்டா பொம்பளை மாதிரி இருக்கே, தம்பி ஏன்டா அழுகுற? தலையில இருக்குற துணிய கழட்டு. அய்யோ இது என்னடா காது குத்தி கம்மல் போட்டுருக்க?

ராகுல்: ஆமா அக்கா, அந்த வினிதா கிட்ட இன்னைக்கும் தோத்துட்டேன்.

அக்கா: அதுக்கு இப்படியா பண்ணுவா? ஆம்பளை சிங்கம் என் தம்பி, உன்னை இப்படி பாக்க என்னால முடியல, தயவுசெய்து இந்த பெட் எல்லாம் வேண்டாம். காதில் இருந்து அந்த கருமத்தை கழட்டு டா.

ராகுல்: இரு அக்கா, அவளை பந்தயத்தில் தோற்கடித்து அப்புறம் கழட்டுறேன். நாளை கேரம் விளையாட போறம். அதில் கண்டிப்பா நான் தான் ஜெய்ப்பேன்.

அக்கா: சரி, நீ தோத்துட்டா?

ராகுல்: அக்கா நான் தோக்க மாட்டேன்.

அக்கா: தோத்துட்டா?

ராகுல்: தோத்துட்டா அவ கொடுக்குற ட்ரெஸ் தான் போடணும்.

அக்கா: தம்பி இப்போவாச்சும் அக்கா சொல்றத கேளு டா. அவ எந்த ட்ரெஸ் குடுப்பானு எனக்கு தெரியும். இது வேணாண்டா.

ராகுல்: அக்கா நான் தோக்க மாட்டேன்.

3 thoughts on “ராகுலின் கதை

  1. சங்கீதா's avatar சங்கீதா

    மஹி, என் கதையை publish பண்ணினத்துக்கு நன்றி. ஒரு கிரெடிட் லைனை சேர்த்திருக்கலாம். இந்த கதை படங்களுக்காக எழுத பட்டது. படங்களுடன் இந்த கதையை படிக்க https://m.facebook.com/story.php?story_fbid=135389571136359&id=100039959495391.

    Like

    1. மன்னிக்கவும் சங்கீதா அவர்களே, உங்கள் கதை என்று எங்களுக்கு தெரியாது, நாங்கள் இப்போது உங்களுக்கு கிரெடிட் கொடுத்து உள்ளோம்

      Like

Leave a comment