ராகுலின் கதை

சீன் 8: ராகுல் வீடு
தலையில் பூ, காதில் ஜிமிக்கி, நெற்றி சுட்டி மற்றும் புடவை அணிந்து ராகுல் வீட்டுக்கு வருகிறான்.

ராகுல்: அக்கா என் நிலைமையை பாத்தியா?

அக்கா: இப்போ ஓ னு அழுது என்ன பிரயோஜனம். நான் தான் நேத்தே சொன்னேன். நீ கேட்கலை.

ராகுல்: அக்கா இனி நான் பாண்டே போட கூடாதாம். நான் அவள் கிட்ட கெஞ்சினேன். சரி இன்னைக்கு புடவை கட்டிக்கோ, நாளைக்கு பாண்ட் தரேன்னு சொன்னா. நானும் நம்பி சரினு சொன்னேன். காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் கூட்டிட்டு போய் எனக்கு புடவை கட்டி அலங்காரம் செய்து போட்டோ எல்லாம் எடுத்துட்டா. அப்புறம் காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் என்னை புடவையில் பார்த்துடாங்க.

அக்கா: சரி அழாதடா. நாளைக்கு பாண்ட் தானே போட போற. இதை கெட்ட கனவா நினைச்சு மறந்திரு.

சீன் 9: காலேஜ்

வினிதா: என்ன மேடம் பாண்ட் போட்டு வந்திருக்க, நீ பாண்ட் போடக்கூடாதுன்னு சொன்னது மறந்திருச்சா?

ராகுல்: நீங்கதான் இன்னைக்கு பாண்ட் போட சொல்லிட்டு மறந்திட்டீங்க.

வினிதா: ஓ அந்த பாண்ட்டா. வா லேடீஸ் ஹாஸ்டலுக்கு.

சீன் 10: லேடீஸ் ஹாஸ்டல்

வினிதா: இந்தா இதில் இருக்குற ட்ரெஸ் போட்டுக்கோ

ராகுல்: இது சுடிதார், ஆனா நீங்க பாண்ட் போடலாம்னு சொன்னிங்க.

வினிதா: மேடம், இதில் கூட பாண்ட் இருக்கு, உனக்கு பாண்ட் போடனும்னா இந்த பாண்ட் மட்டும் தான் போடனும் புரியுதா?

சுற்றி நின்று அனைத்து பெண்களும் சிரித்தனர்.

வினிதா: போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா

துணி மாத்தும் பொழுது ராகுல் யோசித்தான். அவள் பெண் நான் ஆண் அவளை எந்த போட்டியில் ஜெயிப்பது?

ராகுல்: இப்போ இங்கே நான் சொல்ற போட்டிக்கு நீ தயாரா?

வினிதா: தயார், என்ன போட்டி?

ராகுல்: Arm wrestling, தயாரா?

போட்டி ஆரம்பம் ஆனது, இதிலும் வினிதாவே ஜெய்த்தாள்.

வினிதா: ஒரு பொண்ணுகிட்ட தோத்த இந்த கைக்கு மெஹந்தி போட்டுவிடுங்கடி

கையில் மெஹந்தி போட்டுகொண்டு ராகுல் யோசித்தான். எப்படியாவது இவளை ஜெயிக்க வேண்டும். இவளை பீல்ட் கேம்ஸ்ஸில் தோற்கடிக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் நான் நல்லா பயிற்சி எடுக்கணும்.

3 thoughts on “ராகுலின் கதை

  1. சங்கீதா's avatar சங்கீதா

    மஹி, என் கதையை publish பண்ணினத்துக்கு நன்றி. ஒரு கிரெடிட் லைனை சேர்த்திருக்கலாம். இந்த கதை படங்களுக்காக எழுத பட்டது. படங்களுடன் இந்த கதையை படிக்க https://m.facebook.com/story.php?story_fbid=135389571136359&id=100039959495391.

    Like

    1. மன்னிக்கவும் சங்கீதா அவர்களே, உங்கள் கதை என்று எங்களுக்கு தெரியாது, நாங்கள் இப்போது உங்களுக்கு கிரெடிட் கொடுத்து உள்ளோம்

      Like

Leave a comment