ரஞ்சித்தின் கதை

என் பெயர் ரஞ்சித். என் வயது 22, நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். நான் என் வீட்டை விட்டு வேறு இடத்தில் தங்கி வருகிறேன். பணி விசையம் காரணமாக என்னால் வீட்டில் தங்க முடியவில்லை. வீட்டில் தங்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் எனது அம்மாவின் உடைகளை அணிந்து மகிழ்வேன்.

எனக்கு பெண்கள் உடை அணிவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் எனது அம்மாவின் உடைகளை அணிந்து எனக்கு சலித்து விட்டது, எனக்கென்று சில ஆடைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.நான் எனது ஊருக்கே பணி மாற்றம் செய்து கொண்டு வந்து விட்டேன். அப்போது எனக்கென்று வாங்கிய பொருட்களை ஒரு பெட்டியில் வைத்தேன்.

வீட்டில் கேட்டதற்கு இது என்னுடைய நண்பனின் பெட்டி என கூறிவிட்டேன். அதனால் அவர்கள் அதை தொடவில்லை. அதில் எனக்கு தேவையான பெண்கள் ஆடைகள் அலங்கார பொருட்கள் என எல்லாவற்றையும் வைத்து விட்டேன். அவர்கள் வீட்டில் இல்லாத சமையம் அதை எடுத்து உபையோக படுத்தி கொண்டேன். வீட்டில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

Leave a comment