இனியவளே

என் பெயர் மகேஷ்। நான் 26 வயதான ஒரு ஆண்। நான் பெற்றோரை விட்டுவிட்டு, வேலை விஷயமாக வேறு ஊரில் இருக்கிறேன்। எனக்கு பெண்கள் உடை அணிய வேண்டுமென ஆசை। அதனால் நான் எனக்கு தேவையான பெண்கள் உடைகள் மற்றும் ஆடை அலங்காரங்கள் வாங்கி வைத்து இருந்தேன்। எப்போதுமே என்னுடன் யாராவது உடை அணிய இருந்தால் நன்றாக இருக்கும் என நான் எதிர் பார்த்தேன்। நான் பெண் உடை அணியும்பொழுது நான் என்னை மஹேஸ்வரி என்றே நினைத்து கொள்வேன்। மகேஷ் மஹேஸ்வரியாக மாறிவிடுவான்।

ஆனால் எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை। என் வாழ்வில் இன்னொரு ஆண் வந்தான், அவன் பெயர் நிர்மல்। அவனும் என்னை போல பெண்கள் உடை அணியும் பழக்கம் உடையவன்। அவனும் நானும் எங்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டேன்। எனக்கு அவனை அவளாக பார்க்க மிகவும் ஆவலாக இருந்தது। அவன் அவளாக இருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்பினான்। பொதுவாக இங்கே இருக்கும் அவன்கள் அவள்களாக பார்க்கும் பொழுது தோழியாக தோன்றும்। ஆனால் இவனை இவளாக பார்க்கும் பொழுது ஏழு ஜென்மம் வாழ்ந்த ஒரு தோற்றம் ஏற்பட்டது।

அவனின் பெயர் நிர்மல், ஆனால் அவன் அவளாக மாறும்பொழுது அவளின் பெயர் ஷாலினி। அவளை பார்த்த பொழுது என்னுள் இருந்த அவள் மறைந்துவிட்டால்। அவனுள் இருக்கும் அவளுடன் இருக்க ஆவலாக இருந்தான்। அவளை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தான் எனக்குள் இருக்கும் அவன்। அவளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு। அவளை கிறிஸ்துமஸ் தினத்தன்று சந்திக்க அவன் விருப்பம் தெரிவித்தான்। அவளும் சந்திக்க சம்மதம் தெரிவித்தால்। ஆனால் இருவராலும் சந்திக்க முடியவில்லை।

Leave a comment