
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது என்ற பழமொழி எனக்கு மிகவும் பொருந்தியது। என் இனியவளே என்னால் சந்திக்க முடியவில்லையே என்று நான் மிகவும் வருந்தினேன்। அவள் எனக்குள் இருக்கும் பெண்ணை வாடி போடி என்று அழைத்தாள்। நான் அவளிடம் எனக்குள் இருப்பவள் உன்னை பார்க்கும் பொழுது மறைந்துவிடுகிறாள்। எனக்குள் இருக்கும் அவன் தான் வெளியே வருகிறான் என்றேன்। திடீர் என்று எங்களுக்குள் அவ்ளோ அன்பு பரிமாற்றம் நடைபெற்றது। அவளுடன் எனக்கு நீண்ட ஜென்மம் பழகிய உணர்வு। அவள் எனக்கானவள் என்று தோன்றியது।
ஆனால் யாருடைய கேட்ட நேரம் என்று தெரியவில்லை, கிறிஸ்துமஸ் தினத்தன்று எங்கள் இருவராலும் சந்திக்க முடியவில்லை। புத்தாண்டு பிறந்தது, அதற்க்கு முன்னாள் நாள் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம், ஆனால் அதுவும் முடியவில்லை, அவள் அவளின் ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம், அவள் சென்று விட்டால்। நான் எனக்காக வாங்கிய ஆடைகள் அணிகலன்கள் எல்லாமே அவளுக்கு தர ஆவலாக இருந்தேன் நான்। ஆனால் விதி எங்களை சந்திக்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தது। எப்போது தான் அவளை சிந்திப்போம் என்று கவலையாக இருந்தது।
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஐதீகம், அதனால் தை திங்கள் முதல் நாள், பொங்கல் அன்று சந்திக்க திட்டம் தீட்டினோம்। அவளை சந்தித்து, அவளுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொடுத்து, அவளுக்கு எனது அன்பை புரியவைத்து அவளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு, ஒரு நாளாவது அவளுடன் வாழவேண்டுமென்ற எண்ணம் என் மனதில் ஆழமாக பதிந்தது। பொதுவாக மாலை 8 மணிக்கு மேல் சந்தித்தால் தான் அவனுக்குள் இருக்கும் அவளை சந்தோஷமாக காண முடியும், வேற யாரும் அந்த நேரத்தில் தொல்லை செய்ய மாட்டார்கள்। அவளிடம் 14 இரவு 8 மணிக்கு சந்திக்கலாம் என்று வாக்கு கொடுத்தேன்।