
வேலை கிடைத்து சிறிது நாள் ஆனந்தம் ஆக இருந்தோம். ஆனால் அந்த ஆனந்தம் நிலைக்க வில்லை. சிறிது மாதம் கழித்து என் அம்மா இறந்து விட்டால். எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. காரணம் என் பெற்றோர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது தான். ஒரு மகனாக என் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தேன். தனிமை என்னை வாட்டி வதைத்தது. அது வரை சோகமே என்ன வென்று தெரியாமல் இருந்தவன் நான்.
ஆனால் இந்த பிரிவு எனக்கு கோபத்தை அதிக படுத்தியது. சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் கோபம் வந்தது. என் சக ஊழியர்கள் உடன் கோபம் வந்தது, மாணவர்கள் மீதும், என் உயர் அதிகாரிகள் மீதும் கோபம் வந்தது. என் வீட்டிற்கு வந்து பெண் உடை மாற்றிக்கொள்ளும் வரை நாள் தோறும் கோபம் கோபம் தான்.
ஆனால் அந்த பெண் உடைகளில், ஏதோ ஒரு மாயம் உள்ளது, அது அணிந்த உடன் என்னை சாந்தபபடுத்தியது. என் நேரமும் அதை அணிய ஆசை பட்டேன். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை என்பது நன்றாக தெரியும், அது சாத்தியம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். இப்படியே என் வாழ்க்கை எரிமலை யாக இருந்தது. இதில் வசந்தம் வீசாதா என தோன்றியது.
அப்போது என் வாழ்வில் எதிர் பாராத திருப்பு முனை ஏற்பட்டது. எங்கள் பள்ளியில் ஒரு பெரிய செல்வந்தரின் மகன் படித்து வந்தான். அவன் யாருக்கும் அடங்காதவன். பத்தாவது வகுப்பில், எப்படியோ அவன் தேர்ச்சி பெற்று விட்டான். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பில் அவன் சுத்தமாகவும் மொத்தமாகவும் சொதப்ினான். அதிலும் கணக்கு பாடத்தில் ஒற்றை இலக்கு எண்களையே மதிப்பெண் ஆக பெற்றான். நான் பொதுவாக கணக்கு பாடங்களை மட்டுமே கை ஆண்டு கொண்டு இருந்தேன்.
அந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு எடுத்து கொண்டு இருந்த ஆசிரியை, பிரசவத்தின் காரணமாக விடுப்பு பெற்று சென்றார். போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால், என்னை அந்த வகுப்புக்கு ஆசிரியராக நியமித்தனர். அங்கே இருந்த மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள், என்ன வாய் தான் காது வரை நீளும். அந்த செல்வந்தர் மகன் தவிர எல்லாருமே படிப்பில் அசத்தினர்.
முரட்டு தனமாக கட்டு மாஸ்தானாக உடல் கொண்டு இருந்தான். அவனை கண்டிப்பதற்கோ தட்டி கேட்பதற்கோ யாரும் இல்லை, அவனை பார்த்து அனைவரும் நடுங்கினார். ஒரு முறை ஒரு சக மாணவனை, அடித்து விட்டான், எனக்கு கோபம் வந்து விட்டது. அவனை பலர் என்று அடித்து விட்டேன்.
அடுத்த பகுதியில் தொடரும் …..