
நான் மட்டும் வர பாதங்களை தொட்டு வணங்க வில்லை, அவரும் தான் என் பாதங்களை, தொட்டு வணங்குவார். தினமும் இரவு உணவு உண்டு முடித்த பின்னர், என்னை நாற்காலியில் உட்கார வைப்பார். பின்னர், சிறிது அளவு எண்ணையினை எடுத்து என் பாதங்களில் தேய்த்து விடுவார், இதமாக இருக்கும், வேண்டாம் என்றாள் விட மாட்டார். நான் அலுவலகத்தில் செய்யும் பணிகளை விட நீ வீட்டில் செய்யும் பணிகள் மிகவும் சிரமம் ஆனவை. அதுவும் எனக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை இருக்கும், ஆனால் நீயோ ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும்.
எனவே இதில் ஒன்றும் தவறு இல்லை என்பார் என் கணவர். சிறிது நேரம் கழித்து, என்னை தூக்கி கொண்டு கட்டில் அறைக்கு செல்லுவார். வேண்டாம் பா என்னை விடுங்கள் நான் நடந்தே வருகிறேன் என்பேன். அவர் என்னை வாழ்நாள் முழுக்கு சுமப்பதாக உறுதி மொழி எடுத்து இருப்பதாகவும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, உன்னை சுமக்க வேண்டும் என்றார். மேலும் நீ ஒன்றும் பெரிய சுமை அல்ல.
சுமையாக இருந்தாலும், இது சுகமான சுமைதானே. இதில் எனக்கு கஷ்டம் இல்லை மிகவும் விருப்பம் தான் என்றார். அது வரை பொறுமையாக இருக்கும் கணவர், கட்டில் அறையில் புலியாக மாறி விடுவார், நான் புள்ளி மானை போல சிக்கி தவிப்பேன். என் உடைகளை எளிதாக அவிழ்த்து விடுவார். எனக்கு அந்த சமையம் சொர்ககமும் நரகமும் ஒரு சமையத்தில் தோன்றும். உடல் உறவு தொடங்கும் சில நேரம் நரக வலி எடுக்கும். பின்னர் நாங்கள் சொர்ககம் செல்லுவோம்.
இந்த பூமி, சூரியனை நம்பித்தான் இருக்கிறது. பூமி போலவே நானும் என் கணவனை சூரியனை போல நம்பி இருக்கிறேன். காரணம் என் கணவர் என்னையே சுற்றி சுற்றி வருபவர். அனைவருக்கும் காலையில் சூரியன் உதயம் ஆகும், மாலையில் சூரியன் மறையும். ஆனால் எனக்கு அப்படி அல்ல, காலையில் சூரியன் மறையும், மாலையில் தான் உதிக்கும். காலை என் கணவர் வேலைக்கு செல்லுவார் அப்போது சூரியன் மறையும், மாலையில் அவர் அலுவல் முடித்து விட்டு வருவார் அப்போது தான் எனக்கு சூரியன் உதிக்கும்.
எல்லாம் நன்றாக சென்றது, எங்களுக்கு குழந்தைகள் இல்லாத குறையை தவிர்த்து. அவரிடம் நான் கண்ணீர் விட்டு அழுதேன். உங்களை என்னால் தந்தை ஆக்க முடியவில்லையே என்று. நான் தாயாக முடியவில்லையே என்று. பின்னர் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து இரட்டை குழந்தைகளை எடுத்து வளர்த்தோம். அன்று முதல் நான் தாய் ஆனேன்.
அவர்கள் என்னை அம்மா அம்மா என்று அழைத்த போது எனது பெண்மை முழுமை பெற்றதை உணர்ந்தேன். இக்கணமே உயிரை விட்டாலும் மகிழ்ச்சி என தோன்றியது, ஆனால் என் கணவரை விட்டு பிரிய மனம் இல்லை. வாழ்ந்தால் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றும் செத்தாலும் ஒன்றாக சக வேண்டுமென முடிவு செய்தோம்.
முற்றும்…….