
அவன் வீட்டில் இருந்து சில பணம் கட்டுகளுடன் வந்தான். எனக்கு தேவையான துணிகளை எடுத்து கொள்ள சொன்னான். பின்னர் என் வீட்டை விற்று அதில் வந்த காசையும் எடுத்து கொண்டோம். வேறு மாநிலம் சென்றோம். அங்கே ஒரு கோவிலுக்கு கூட்டி சென்று என் கழுத்தில் தாலி கட்டினான். நெற்றியில் பொட்டும் வைத்தான். அந்த மனகோலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடி ஏறினோம். அன்றே என் கணவர் கோபி என்னை வெளியே கூட்டி சென்றார்.
என் சேலை மார்பில் சற்று விலகி இருந்தது, நான் அதை கவனிக்க வில்லை. கோபி அதை பார்த்து விட்டு செறி செய்ய சொன்னார். நான் அவரை முகத்திற்கு முகம் பார்ப்பதற்கே வெட்க படுவேன், காரணம் வெட்கமாக இருக்கலாம், மரியததாயாகவும் இருக்கலாம். அவர் என் தலையை கோதி விட்டார். எனக்கு வெட்கமாக இருந்தது. அன்று இரவு எங்கள் முதல் இரவு, கல்யாணத்திற்கு பிரகாண முதல் இரவு என்று வைத்து கொள்ளலாம். வழக்கம் போல பால் பழம் எல்லாம் ஏற்பாடு செய்தேன். அவர் பாதங்களை தொட்டு வணங்கினேன்.
அவர் இதெல்லாம் எதற்கு என்றார். நான் இது நம் பண்பாடு மற்றும் கலாசாரம் என்றேன். இப்போது எனக்கு வாழ்க்கை குறித்த சில பயம் வந்தது. என்னை பார்த்து கொள்ள அவர் இருக்கிறார் என்றாலும், வெளியே சொல்ல முடியாத ஒரு பயம். இனிமேல் நான் அவரின் தோழியாகவும், மனைவியாகவும், தாய்யாகவும் இருந்து அவரை பார்த்து கொள்ள வேண்டும் அல்லவா. அவரும் எனக்கு கணவனாகவும், தோழன் ஆகவும், தந்தை ஆகவும் இருந்து என்னை பார்த்து கொள்ள வேண்டும்.
சில நாட்கள் சென்றது. நாங்கள் சந்தோஷமாக களித்தோம். எங்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணான வெண்ணிலாவின் நட்பு கிடைத்தது. என் கணவருக்கு, ஒரு நகை கடையில் கண்காணிப்பாளர் வேலை கிடைத்தது. அதாவது ஆங்கிலத்தில் சூப்பர் வைஸர் என்று சொல்லுவார்கள். கை நிறைய சம்பளம். நான் சிக்கனமாக செலவு செய்து குடும்பம் நடத்தினேன். வெண்ணிலா அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லுவாள். ஒரு நாள் நான் பட்டு புடவை அணிந்து, கொண்டு இருந்தேன்.
அவள் என்னை பார்த்து வீட்டில் என்ன விசேஷம் என்றாள். நான் அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் வேலை முடித்து கலிப்பாக வருவார், அவரை உற்சாக படுததாவே இவ்வாறு உடை அணிந்தேன் என்றேன். அவர் வீட்டில் இருக்கும் சமயம் நான் அவரை உற்சாகமாக பார்த்து கொள்ள வேண்டாமா என்றேன். அவளும் உன் புருஷன் மிகவும் கொடுத்து வைத்தவர் என்றாள். அவர் வந்த உடன் அவள் வீட்டுக்கு சென்றாள். நான் அவரின் காலில் உள்ள காலணிகளை அவிழ்த்தேன்.
பின்னர் அவர் கால்களை தொட்டு வணங்கினேன். நீங்கள் கேட்கலாம் அவர் காலை தினமும் தொட வேண்டுமா என்று. நான் எங்களை இருவராக பார்க்க வில்லை. ஒருவராகவே பார்க்கிறோம். என் கைகள் என் கால்களில் இருப்பதை அவிழ்பதாக நான் எண்ணுகிறேன். என் கைகள் என் கால்களை தானே தொட்டு கும்பிடுகிறது என்றேன். நீங்கள் கேக்கலாம் இதே போல தான உன் கணவரும் நினைக்க வேண்டும். அவர் என்றாவது உன் கால்களை தொட்டது உண்டோ என்று. அதற்கான விடை.
அடுத்த பகுதியில் தொடரும் …..